Homeசெய்திகள்தமிழ்நாடுகுறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

-

 

குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!
File Photo

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இதையடுத்து, குறுவைச் சாகுபடிக்கான ஏற்பாடுகளை டெல்டா மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சுனைனாவின் ரெஜினா படத்தின் ரிலீஸ் அப்டேட்!

குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து 90வது ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 16 முறை குறிப்பிட்ட தேதியான ஜூன் 12- ல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 12- ஆம் தேதிக்கு முன்னதாக 12 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2011- ஆம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக, 8 ஆண்டுகளாக போதிய அளவு தண்ணீர் இல்லாததால், ஜூன் 12- ல் தண்ணீர் திறக்கப்படவில்லை.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள சூழலில், குறுவைச் சாகுபடிக்கான ஏற்பாடுகளை டெல்டா மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி, டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளைத் தூர்வாறும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

விஜய் சேதுபதியின் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்தில் இணைந்த கபாலி பட நடிகை!

இதனைத் தொடர்ந்து, நெல் விதைப்புப் பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி மற்றும் காரைக்காலில் 5 லட்சம் ஏக்கரில் குறுவைச் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 11 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கரூர், ஈரோடு வழியாக திருச்சி முக்கொம்பு அணைக்கு நான்கு நாட்களில் வந்தடையும். இதைத் தொடர்ந்து, கல்லணைக்கு கொள்ளிடம் ஆறாகவும், டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிக்கு காவிரி ஆறாகவும் பாய்கிறது. இது தவிர, அரியலூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் காவிரி நீர் மூலம் பயிர் சாகுபடி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ