Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

-

 

இரண்டு ஆண்டுகளுக்கு பின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் சரிந்தது!
Photo: Mettur Dam

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31 அடியாக சரிந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் தேவைக்காக, மட்டும் முதற்கட்டமாக, வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தேவைக்கேற்ப இதனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“5 மாநிலங்களில் தேர்தல் விதி அமலுக்கு வந்தது”- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்த முறை ஜூன் 12- ஆம் தேதி முதல் 120 நாட்களில் 92 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவமழை பொய்த்துப் போனதாலும், கர்நாடகா, தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி தண்ணீரைத் தராததாலும், கடந்த 1981- ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 41 ஆண்டுகள் கழித்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், அடுத்தாண்டு ஜனவரி 28- ஆம் தேதி வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அணையில் தண்ணீர் இல்லாததால், இந்த முறை 110 நாட்களுக்கு முன்னதாகவே, தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!

இன்று (அக்.10) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 122 கனஅடியில் இருந்து 163 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 31.30 அடியில் இருந்து 30.90 அடியாகக் குறைந்துள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 7.88 டி.எம்.சி.யாக உள்ளது.

MUST READ