Homeசெய்திகள்தமிழ்நாடு"அமைச்சர் மீது நஷ்ட ஈடுக்கோரி வழக்கு தொடரவுள்ளேன்"- அண்ணாமலை அறிவிப்பு!

“அமைச்சர் மீது நஷ்ட ஈடுக்கோரி வழக்கு தொடரவுள்ளேன்”- அண்ணாமலை அறிவிப்பு!

-

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் பரப்பியதற்காக, அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடரவுள்ளேன் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!!!

இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.

ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை.

ஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடுக்கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு” என்று விமர்சித்துள்ளார்.

MUST READ