Homeசெய்திகள்தமிழ்நாடுஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

-

- Advertisement -

"பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!

அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தந்தை பெரியாரின் கொள்கைகளை முன்னிறுத்தி தமிழர்களின் அரசியல் வரலாற்றை எழுதத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டைத் தலைநிமிரச் செய்தார். அண்ணா அவர்களின் நினைவு நாளான இன்று கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி(தெ) மாவட்டக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்றோம்.

திருச்சி சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் சிலைக்கு மாலை அணிவித்து, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என உறுதியேற்றோம். அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார்.

MUST READ