Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்

இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்

-

இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்

தமிழகத்தில் பாடங்களை விரைந்து முடிக்க சனிக்கிழமைகளும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுத்தேர்வு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7- ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, அதன்படி ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14 ஆம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

Anbil

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து தாமதமாக பள்ளிகள் திறப்பதால், அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பாடங்களை விரைவில் முடிக்க சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், “கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையில், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும்” என பதிலளித்தார்.

MUST READ