Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களுக்கு இலவச லேப்டாப்- அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்- அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

-

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்- அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Image

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “8,340 நடுநிலைப் பள்ளிகள், 3,547 உயர்நிலை மற்றும் 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர். அரசின் நிதி நிலை சரியானதும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும். பஸ்பாஸ் வழங்கப்படும் வரை, பள்ளி சீருடையில் இலவச பேருந்து சேவையை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Image

மாநில கொள்கை வடிவமைப்பு பிறகு +1 பொதுத் தேர்வு ரத்து குறித்து அறிவிப்பு வெளியாகும். +1 பொதுத் தேர்வு தற்போதைய நடைமுறையே தொடரும். அரசு பள்ளிக்ளில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1.31 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். உடற்கல்வியை தனிப்பாடமாக கொண்டு வருவது குறித்து 15-ம் தேதி நடைபெறும் துறை சார்ந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். நடப்பாண்டு அதிக அளவில் தேர்ச்சி பெற இலக்கு நிர்ணயம். ஆசிரியர்களும் அதிக தேர்ச்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்து பணியாற்ற வேண்டும்” என்றார்.

MUST READ