Homeசெய்திகள்தமிழ்நாடு'அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்றக் காவல்'!

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்றக் காவல்’!

-

Senthil balaji

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி வரை நீட்டித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணி:

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த முறை காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியை அடுத்த முறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக்குமாறு புழல் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதி முன்பு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடைக்கப்பட்டுள்ளார்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா- நாளை கொடியேற்றம்

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14- ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ