தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி மீது அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது.
முகத்தை அழகாக்கும் ஜாதிக்காய்…. எப்படி பயன்படுத்துவது?
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் ஆட்சேப மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், “மணல் கொள்ளையை அனுமதித்ததன் மூலம் தவறு செய்துவிட்டோம் என நீர்வளத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் உமாபதி நிர்பந்தித்துள்ளார்.
ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!
சட்டவிரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு என அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மணல் மாஃபியா, தமிழக அரசிடம் இருந்து பாதுக்காக்கவே அதிகாரிகள் பெயரை வெளியிடவில்லை. நீர்வளத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.