காவிரி பிரச்சனையில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றம்தான் – துரைமுருகன்
காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும்போது கர்நாடகாவின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “வரும் 21 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கின் முடிவை தெரிந்து கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை பற்றி முடிவு செய்யப்படும். காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும்போது கர்நாடகாவின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும். காவிரி பிரச்சனையில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான். காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு கர்நாடக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு ஒவ்வொரு அங்குலமும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்.தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கூறியிருப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது . உச்ச நீதிமன்றத்தில் வாதாடி காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்து எனக்கு தெரியாது. அனைத்து கட்சி கூட்டம் போட கூடாது என்று இல்லை, செப். 21ம் தேதி முடிவு தெரிந்த பின் கூட்டம் பற்றி முடிவு எடுப்போம். தமிழ்நாட்டு அதிகாரிகள் நீர் அளவை ஆய்வு செய்ய கோரிக்கை வைப்போம். தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம், நிவாரணம் வாங்கிக் கொடுப்போம்
உச்சநீதிமன்ற ஆணையின்படி, ஒரு ஆண்டில் கர்நாடகா குடிநீருக்காக உபயோகிக்கக்கூடிய நீரின் அளவு 6.75 டிஎம்சி மட்டுமே. குடிநீர் பயன்பாட்டிற்கு பிறகு காவிரி படுகையில் கர்நாடகா திரும்ப அளிக்க வேண்டிய நீர் 27 டி.எம்.சி. நிலைமை இவ்வாறு இருக்க, குடிநீர் தேவை என்ற போர்வையில் கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்” என்றார்.