துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், கர்நாடக அரசு ஆணையம் அமைக்கக் கூடாது என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஆணையம் அமைப்பதில் உறுதியாக உள்ளோம். காரணம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்ப்பது நல்லது. ஆனால் பிடிவாதக்காரர்களிடம் அது முடியாத காரியம்.
மேலும் பேசிய அவர், “துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? இது எல்லோரும் சேர்ந்து கூட்டு முயற்சியால் எடுக்க வேண்டிய முடிவு. இதை எல்லாம் கட்சியின் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர்களிடம் பேசி யாருக்கு துணை முதல்வர் பதவியை தர வேண்டும் என்பதை அவர்தான் முடிவு எடுப்பார். நான் முறையாக கட்சியில் வளர்ந்தவன். கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவன். என்னுடைய தனிப்பட்ட மரியாதையைவிட கட்சியின் நோக்கம், பலத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.