Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி!

-

 

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி!
File Photo

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

இடங்களைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால் நீட் எழுத ஓராண்டுக்கு தடை!

கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றம் வந்த சோனியா காந்தியிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனைத் தவிர, அவரது மனைவி ஆதிலட்சுமி, தொழிலதிபர் செண்பகமூர்த்தி ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவர்கள் மூன்று பேரையும் விடுவிப்பதாக அறிவித்த நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.

MUST READ