ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சென்று நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் லேசான நெஞ்சு வலி காரணமாக போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவம்னை அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈ .வி.கே.எஸ் இளங்கோவனை மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அமைச்சருடன் மருத்துவமனை மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இருதய மருத்துவர் மூர்த்தி, “இருமல்,சளி அதிகமாக இருந்ததாலும் நோய் தொற்று பிரச்சனை இருந்ததாலும் தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது சீரான உடல் நலத்துடன் இருக்கிறார். இன்று மாலை ஐ.சி.யூ யில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றவடுவார்” என்று தெரிவித்தார்.