Homeசெய்திகள்தமிழ்நாடுகோடநாடு வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் - மா.சுப்பிரமணியன்

கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் – மா.சுப்பிரமணியன்

-

- Advertisement -
kadalkanni

கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் – மா.சுப்பிரமணியன்

கோடநாடு கொலை வழக்கில் உண்மை தன்மை வெளிவரும், விரைவில் அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

masu

சென்னை மதுரவாயல் அருகே வானகரத்தில் திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மகிழ்வரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திரைப்பட நடிகர்கள் பாண்டியராஜன், ரமேஷ்கண்ணா, போண்டா மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக மற்றும் கலைஞரின் புகழ் குறித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திருப்பூரில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை வரை ஒரு மருத்துவரும், துணை சுகாதார நிலையத்தில் ஒரு செவிலியரும் மட்டும் தான் இருப்பார்கள். தமிழகத்தில் 1021 மருத்துவர்களுக்கான காலி பணியிடம் உள்ளது. அதனை பூர்த்தி செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 14 பேர் கொரோனா வில் பணியாற்றியவர்கலூக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதிலும் கூட மதிப்பெண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ma subramanian

கோடநாடு விவகாரம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கோரிக்கை குறித்து அமைச்சர் மா.சு கூறுகையில் விரைவில் உண்மை தன்மை வெளிவரும், குற்றவாளிகள் அனைவரும் சிறை செல்வார்கள் என்றார்.

MUST READ