Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளச்சாராயம் குடித்த 66 பேருக்கு சிகிச்சை- அமைச்சர் மா.சு.

கள்ளச்சாராயம் குடித்த 66 பேருக்கு சிகிச்சை- அமைச்சர் மா.சு.

-

கள்ளச்சாராயம் குடித்த 66 பேருக்கு சிகிச்சை- அமைச்சர் மா.சு.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 66 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய சிறப்பு அலுவலர் நியமிக்கப்படுவார். கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 66 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய விற்பனை என்பது எல்லா காலத்திலும் இருந்த பிரச்சனை. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இரும்புகரம் கொண்டு அடக்கி கள்ளச்சாரய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவார்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. 15,853 கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. டெங்கு சிகிச்சை பெறுபவர்களை தொடர்ந்து கண்கானிக்க அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். கொரோனா தொற்றில் இருந்தும் தமிழகம் மீண்டு வருகிறது, தினசரி பாதிப்பு 16 ஆகியுள்ளது. விரைவில் ஓரிலக்கத்தில் வரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

MUST READ