36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கேரளாவில் மர்ம காய்ச்சல் உயிரிழப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் 13 இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 103 இடங்களில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு மருத்துவ முகாம் மூலம் 1.88 லட்சம் பேர் பயனடைந்தனர். வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப் படுத்துவதோ, வெறுக்கும் நிலையில் பார்க்கவோ வேண்டாம். அப்படி நடந்துகொண்டால் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. உதவி பேராசிரியர்களை இணை பேராசிரியர்களாக மாற்றும் கலந்தாய்வு ஜூலை 4ல் தொடங்கப்படும். வழக்கின் விசாரணை ஜூலை 6ம் தேதி வந்தாலும், முன்கூட்டியே கலந்தாய்வு தொடங்கப்படும்” என்றார்.