Homeசெய்திகள்தமிழ்நாடுடெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்;3 பேர் மட்டுமே பலி- மா.சுப்பிரமணியன்

டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்;3 பேர் மட்டுமே பலி- மா.சுப்பிரமணியன்

-

டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்;3 பேர் மட்டுமே பலி- மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை 3 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் இந்தாண்டில் ஜனவரி முதல் இதுவரை 4,048 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டில் இதுவரை 3 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். அடுத்த 3 மாதங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொசு ஒழிப்புக்கான மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பு உள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு பரவலை பொறுத்தவரை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை. திருவாரூரில் உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவருக்கு டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்பு இல்லை. சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் 12 லட்சம் குழந்தைகளுக்கும், அடுத்த 10 நாட்களுக்குள் Madras Eye கண் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது” என்றார்.

MUST READ