பாஐகவின் அசிங்க அரசியலுக்கு இதைவிட என்ன சான்று தேவை? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்
நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார். தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் இருந்து தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே கிளம்பினார். முன்னதாக தமிழக அரசின் உரையை புறக்கணித்தது தொடர்பாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் பாட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை.
உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால், முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என கூறினார். இந்த நிலையில், பாஐகவின் அசிங்க அரசியலுக்கு இதைவிட என்ன சான்று தேவை? என அமைச்சர் மனோ தங்க ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ் நாட்டிற்ககு செய்து வரும் துரோகத்தை மக்கள் அறியும் நிலை ஏற்ப்பட்டுவிடும் என்பதால் சட்டமன்றத்தில் கவர்னர் உரையை படிக்காமல் தவிர்தார் கவர்னர். சனநாயக மரபுகளையும், சட்டமன்ற நடைமுறையையும் மீறி தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான தனது நிலைபாட்டை மீண்டும் உறுதி செய்தள்ளார்.
பாஐக வின் அசிங்க அரசியலுக்கு இதைவிட என்ன சான்று தேவை? என கேள்வி எழுப்பியுள்ளார்.