Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை- அமைச்சர் மா.சு.

புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை- அமைச்சர் மா.சு.

-

புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை- அமைச்சர் மா.சு.

முகக்கவசம் அணிவதை மக்கள் இயல்பாக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

minister-ma-subramaniyan-164974357816x9-1

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “புதியவகை கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாகவே உள்ளது. இனிமேல் தொற்றெல்லாம் முடிந்துவிடும் என்று கூற முடியாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற பாதிப்புகள் இனி இயல்பாக இருக்கும் என்பதால் முகக்கவசம் அணிவதை மக்கள் இயல்பாக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு cluster ஆக இல்லை, தனித்தனியாகவே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இருந்தாலும் RT-PCR பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படும். அரசு சார்பில் 78 இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் தென்படுபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக மக்கள் சுய கட்டுப்பாட்டோடு முகக்கவசம் அணிவது கை கழுவுவதை இயல்பாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 11,000 அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் குறித்த ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் எழவில்லை. 64,281 படுக்கைகள், 33,664 ஆக்சிஜன் படுக்கைகள், 130 ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள் தயார் நிலையில் உள்ளன” எனக் கூறினார்.

MUST READ