தமிழகத்தில் 3, 500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி தேவையில்லை என அமைச்சர் முத்துச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவை நிகழ்வுகள் சரிவர இயங்கவில்லை. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில், தமிழகத்தில் 3, 500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி தேவையில்லை என அமைச்சர் முத்துச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய அவர், 3,500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற தேவையில்லை என கூறினார். இந்த கட்டடங்களுக்கு சுயசான்று மூலம் அனுமதி வழங்கப்படும் எனவும் கூறினார்.