நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும்- அமைச்சர் பெரிய கருப்பன்
சென்னையில் நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்குப் பின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதித்ததால் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதுமே தக்காளி விலை உயர்ந்துள்ளது. நாளை முதல் சென்னையில் மட்டும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று தக்காளி விலை உயர்கிறது. அடுத்தாண்டு தக்காளி விலையேற்றம் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். பண்ணை பசுமை கடைகளில் ஏற்கனவே தக்காளி விற்கப்பட்டுவருகிறது. வட சென்னையில் 32 ரேசன் கடைகள், மத்திய சென்னையில் 25, தென் சென்னையில் 25 என 82 ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும்” என்றார்.