அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணிப்பிக்க 3 நாட்கள் அவகாசம்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒரு மாதம் முன்னதாக ஜூலை இரண்டாம் தேதி தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 3 ம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும். பொறியியல் மாணவர் எச்சரிக்கைக்கான கலந்தாய்வு ஒரு மாதம் முன்னதாக ஜூலை இரண்டாம் தேதி தொடங்க இருக்கிறது. பொது பிரிவு கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
கலை அறிவியல் படிப்புகளுக்கு இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 627 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 3 நாட்கள் நீடிக்கப்படுவதாகவும் மாணவர்களின் வசதிக்காக கல்லூரிகள் திறந்திருக்கும். சனி ஞாயிறு, திங்கள் கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்சி தேர்வுகள் வெளியாகியுள்ளது, நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஒரு மாதம் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது” என்றார்.