Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுக்கே தெரியாமல் ஆளுநர் கூட்டம் நடத்துகிறார்- பொன்முடி

அரசுக்கே தெரியாமல் ஆளுநர் கூட்டம் நடத்துகிறார்- பொன்முடி

-

அரசுக்கே தெரியாமல் ஆளுநர் கூட்டம் நடத்துகிறார்- பொன்முடி

அரசுக்கே தெரியாமல் ஜூன் 5-ஆம் தேதி உதகையில் துணைவேந்தர் கூட்டத்தை ஆளுநர் அறிவித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ponmudi minister

தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுவருகிறாது. திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ரவி கடுமையாக சாடியுள்ளார். அண்மையில் கூட, திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் கோஷம் என்றும், காலாவதியான கொள்கை எனவும் ஆளுநர் விமர்சித்திருந்தார். திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமைச்சர் பொன்முடி, “அரசுக்கே தெரியாமல் ஜூன் 5-ஆம் தேதி உதகையில் துணைவேந்தர் கூட்டத்தை ஆளுநர் அறிவித்துள்ளார். கூட்டம் நடத்துவது பற்றி இணைவேந்தராக இருக்கும் எனக்கு ஆளுநர் தகவல் அளிக்கவில்லை. கல்விக் கொள்கை பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் நேரடியாக விவாதிக்க தயார். வரலாறே தெரியாமல் அண்ணாமலை தொடர்ந்து பேசிவருகிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டது எம்.எல்.ஏ பரந்தாமனுக்கு தெரியாமலா இது நடந்தது என்று அண்ணாமலை கேட்கிறார். கடைசி சிண்டிகேட் கூட்டம் ஏப்ரல் 20ல் நடந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏப்ரல் 17ல் தான் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்தார்” எனக் குற்றஞ்சாட்டினார்.

MUST READ