Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

-

 

"பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?"- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
Photo: Minister Ponmudy

சென்னையில் சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி ஆகிய இடங்களில் உள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடுகளில் இன்று (ஜூலை 17) காலை 07.45 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

சோதனை நடைபெறும் வீட்டில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் அலுவலகம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சண்முகபுர காலனியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த தி.மு.க. நிர்வாகிகள் சோதனை நடைபெறும் அமைச்சர் பொன்முடியின் இல்லங்கள் முன்பு குவிந்து வருகின்றனர். அதேபோல், தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.

‘சத்யதேவ் சட்ட அகாடமி’யைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கடந்த ஜூன் 13- ஆம் தேதி அன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகள், அவரது அலுவலகங்கள் மற்றும் அமைச்சரின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ