Homeசெய்திகள்தமிழ்நாடு“ஆன்லைன் சூதாட்டம் மூலம் வரும் பாவப்பட்ட வருவாய் தமிழக அரசுக்கு தேவை இல்லை”

“ஆன்லைன் சூதாட்டம் மூலம் வரும் பாவப்பட்ட வருவாய் தமிழக அரசுக்கு தேவை இல்லை”

-

- Advertisement -

“ஆன்லைன் சூதாட்டம் மூலம் வரும் பாவப்பட்ட வருவாய் தமிழக அரசுக்கு தேவை இல்லை”

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு வாதிட்டது தவறானது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

minister regupathy

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு நேற்று வாதிட்டது. மத்திய அரசின் ஒழுங்கு முறை விதிகள் வலுவானதாக இல்லை. மாநில அரசுக்கான உரிமையில் தான் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. நேரடியாக மற்றும் ஆன்லைனில் விளையாடுவதற்கு வேறுபாடு உள்ளது. மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டால் வரும் வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள் உயிர் பலியை பார்க்கவில்லை. ஆன்லைன் சூதாட்டம் மூலம் வரும் பாவப்பட்ட வருவாய் தமிழக அரசுக்கு தேவை இல்லை. நேரடியாக மற்றும் ஆன்லைனில் விளையாடுவதற்கு வேறுபாடு உள்ளது. ஆன்லைன் விளையாட்டு குறித்து ஒன்றிய அரசு விதிகள் தான் கொண்டு வந்ததே தவிர சட்டம் எதுவும் இயற்றவில்லை.

ஆன்லைன் விளையாட்டு ஒரு கொடிய நோய், அதனை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. பொதுமக்கள் கருதி, ஆன்லைன் விளையாட்டு நடத்துவோர் என அனைத்து தரப்பினருடைய கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளன. ஆன்லைன் கேம் வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். திமுக சார்பாக நீதிமன்றத்தில் வாதாடி வருகிறோம்.” என்றார்.

MUST READ