Homeசெய்திகள்தமிழ்நாடு"தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது....."- அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை!

“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது…..”- அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை!

-

 

"தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது....."- அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை!
Photo: Minister Sakkarapani

நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல் வெளியான நிலையில், இதுப்பற்றி தணிக்கை செய்து உண்மைத் தன்மையை அறிய மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநருக்கும் உத்தரவிட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ஜூன் 15- ல் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்!

இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7174 மெட்ரிக் டன் அரவைக்கு அனுப்பியது போக 15099 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. இதில் இருந்து தான் 7000 டன் இருப்பில் இல்லை என்று இரு தரப்பினர் முரணாகக் கூறுவதாகக் கேள்விக்குறியுடன் செய்தி வந்ததைப் பார்த்தவுடனே தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரையும் அந்த கிடங்கில் 100% தணிக்கை செய்து உண்மைத்தன்மையை அறிய ஏற்பாடு செய்திட ஆணையிட்டுள்ளேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் வருகை!

அதற்குள் அவசரப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை உண்மையிலேயே ஈர்த்து வரும் நம் முதலமைச்சர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்கிறாரே என்று பொறாமையின் உச்சக்கட்டத்தில் பத்திரிகையில் வந்த செய்தியை ஆராயாமல் வசவுகளை அள்ளித் தெளிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது.” இவ்வாறு அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ