“இரண்டரை வருட திமுக ஆட்சியில் 34 ஓதுவார்களுக்கு பணி நியமனம்”- சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறையின், திருக்கோயில்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 15 ஓதுவார்களுக்குப் அமைச்சர் சேகர்பாபு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் தான் கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்றுசொல்லி வருகிறார்கள். தமிழில் இறைவனை பாடி வழிபடும் நோக்கில் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளனர். இருண்டரை வருட திமுக ஆட்சியில் 34 ஓதுவார்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். மொத்தமாக 107 ஓதுவார்கள் தமிழகம் முழுவதும் பணியில் உள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது 10 பெண் ஓதுவார்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணை வழங்கப்பட்ட 3 பெண் அர்ச்சகர்கள், உதவி அர்ச்சகர்களாக திருக்கோயில்களில் நியமிக்கப்பட உள்ளனர். 11 பெண் அர்ச்சகர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
காலியாகவுள்ள மேலும் 73 ஓதுவார் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெற்ற 160-க்கும் மேற்பட்டவர்கள் உதவி அர்ச்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர்” என்றார்.