Homeசெய்திகள்தமிழ்நாடு“இந்துக்களை பாதுகாகாக்கும் கட்சி திமுக"- சேகர்பாபு

“இந்துக்களை பாதுகாகாக்கும் கட்சி திமுக”- சேகர்பாபு

-

“இந்துக்களை பாதுகாகாக்கும் கட்சி திமுக”- சேகர்பாபு

திராவிட மாடல் ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுகளில் 922 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Sekarbabu

கோவை அனுவாவி சுப்பிரமணியர் கோயில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “திராவிட மாடல் ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுகளில் 922 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ரூ.5,135 கோடி மதிப்பிலான 5,335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. திமுக ஆட்சியில் பக்தர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். இது ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல. அனுவாவி சுப்பிரமணியர் கோயிலில் ரோப் கார் வசதி அமைக்க சாத்திய கூறு உள்ளது. ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை பெற்றவுடன் ரோப் கார் அமைக்கும் பணி நடைபெறும்.

மேலும் திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயில்களில் ரோப் கார் வசதி அமைக்கும் பணி நடைபெறும். கரூர் அய்யர்மலை, சோளிங்கர் நரசிம்ம பெருமாள் கோயில்களில் நடைபெறும் ரோப் கார் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆதினங்கள் ஆட்சியாளர்களை தேடி சென்ற காலம்போய், இப்போது ஆட்சியாளர்கள் ஆதீனங்களை தேடி வருகின்றோம். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல. இந்துக்களை பாதுகாக்கும் அரவணைக்கும் கட்சி” என்றார்.

MUST READ