Homeசெய்திகள்தமிழ்நாடுகோவில் பணிகள் குறித்து கேள்வி கேட்க தமிழிசைக்கு உரிமை இல்லை- சேகர்பாபு

கோவில் பணிகள் குறித்து கேள்வி கேட்க தமிழிசைக்கு உரிமை இல்லை- சேகர்பாபு

-

கோவில் பணிகள் குறித்து கேள்வி கேட்க தமிழிசைக்கு உரிமை இல்லை- சேகர்பாபு

அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை எடுபடவில்லை என்பதால் போராட்டங்கள் நடத்துகிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “அண்ணாமலையின் பாதயாத்திரை எடுபடவில்லை. பாதயாத்திரை எடுபடவில்லை என்பதால் போராட்டம் நடத்துகிறார். அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ மிரட்டல்களை நான் சந்தித்து இருக்கிறேன். இது போன்ற போராட்டங்கள் என் பணியை தடுத்துவிடாது. 45 ஆண்டுகளாக அச்சுறுத்தலை சந்திக்கிறேன். தமிழக அரசின் செயல்பாடுகள், கோவில் பணிகள் குறித்து கேள்வி கேட்க தமிழிசைக்கு உரிமை இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் கோயில்களில் இறைப்பணி செய்யும் அரச்சகர்களுக்கு எந்தவித பிரச்னை வந்தாலும் துறை ரீதியிலான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம். ஆர்ப்பாட்டம், போராட்டம் இவற்றின் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது. வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம். அண்ணாமலையின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். 12000க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

MUST READ