Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு!

-

- Advertisement -

 

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

அறுவைச் சிகிச்சைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வரும் ஜூன் 21- ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்!

அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து, அமலாக்கத்துறைச் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, கோடைக்கால சிறப்பு அமர்வில் முறையிட்டார்.

“பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 8.1% ஆக அதிகரிக்க வாய்ப்பு”- எஸ்பிஐ தகவல்!

இந்த விவகாரத்தை முதலில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கட்டும் எனக் கூறிய, நீதிபதிகள் உயர்நீதிமன்றம் விசாரிக்கும் முன்பு தாங்கள் எப்படி முடிவெடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை ஜூன் 21- ஆம் தேதி விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

MUST READ