சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுகளைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை ஒன்றாக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, மனுக்கள் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
ஆவடி CRPF கபடி போட்டி 2023 – கோப்பையை வென்றது யார்?
அந்த வகையில், இரண்டாவது நாளாக, இன்று (ஜூலை 27) மாலை 04.00 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய வேண்டும். அதிகமான தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகமைகள் கைது செய்கின்றன. சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறது தானே” என்று கூறி, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதி
அத்துடன், ஆகஸ்ட் 1- ஆம் தேதி மதியம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது, இரு தரப்பும் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை முடிக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்க இரண்டு மணி நேரம் அவகாசம் கோரினார்.