17 மணி நேர சோதனைக்கு பிறகு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி கவனித்த துறையை கையிலெடுக்கும் முதல்வர்?
அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரைச் செய்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. அமலாக்கத்துறையிடம் ஆதாரங்கள் உள்ளதால் தான் அமைச்சர் அறையில் சோதனை நடத்தப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரை முதலமைச்சர் நேரில் சென்று பார்த்தது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!
வேலை வாங்கித் தருவதாக நடந்த பண மோசடி தொடர்பாகவே விசாரணை நடக்கிறது. பணத்தைத் திருப்பி அளித்து விட்டோம் என்று கூறினால் தவறு சரியாகி விடாது. விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத்துறைச் சட்டப்படி தெரிவிப்பார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முதலமைச்சரும் அமைச்சர்களும் உணர வேண்டும். செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எங்கே வந்தது என முதலமைச்சர் விளக்க வேண்டும். வழக்கில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்” எனத் தெரிவித்துள்ளார்.