Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

-

 

சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
Video Crop Image

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ரஜினி பட இசையமைப்பாளர் மறைவு… சோகத்தில் திரையுலகம்…

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஜாமீன் கோரி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிமன்றங்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இதனால் மீண்டும் மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த சூழலில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் பிப்ரவரி 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.

பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை… கார் ஓட்டுநர் கைது…

இந்த நிலையில், கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசித்து வரும் நிலையில், இன்று (பிப்.08) காலை 09.00 மணிக்கு திடீரென வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கேரளா பதிவெண் கொண்ட வாகனங்களில் வந்த 5- க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

MUST READ