- Advertisement -
அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி 3வது நாளாக இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 471 நாட்கள் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் வாரத்தின் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் மற்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி கார்த்திக் தசரி முன்னிலையில், 3வது நாளாக செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட்டார்.