பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைச் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று (ஜூன் 21) காலை பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காங்கிரஸின் நாயகன் இராகுல் காந்தி;
இது குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுமான் தலைமையிலான குழுவினர் பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். இதயத்தில் நான்கு இடங்களில் இருந்த அடைப்புகள் அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டன. பைபாஸ் சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதய செயல்பாடு சீராக இருக்கிறது. இதய சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவரின் உடல்நிலைத் தொடர்ந்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.