Homeசெய்திகள்தமிழ்நாடு"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

-

- Advertisement -

 

"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
Video Crop Image

சென்னை சைதாப்பேட்டையில், சாலையில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வுச் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னையில் அதிகளவு மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பில்லை. மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்புகள் குறைந்தன. மழையால் பாதிக்கப்பட்ட ஒரு சில இடங்களில் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னையில் இன்று (ஜூன் 20) 90 இடங்களில் மலைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. முகாமில் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் மற்றும் இதர பொதுச் சுகாதார பணியாளர்கள் பணியில் இருப்பர்.

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

காய்ச்சல், சளி மற்றும் இதர தொற்று நோய்களுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரூபாய் 46 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 15 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், 140 ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. காவிரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை (ஜூன் 21) அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!

நீதிமன்ற உத்தரவையடுத்து, அறுவைச் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு மூன்று இரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருந்தனர். அதேபோல், அமலாக்கத்துறையால் கைதான செந்தில் பாலாஜியை எட்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ