மத்திய அமலாக்கத்துறையால் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.
மிரட்டலான லுக்கில் தளபதி விஜய்… லியோ படத்தின் அசத்தல் அப்டேட்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கோரிய மனுவையும், 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரிய அமலாக்கத்துறையின் மனுவையும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரித்தார்.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், “பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யவிருப்பதால் காவல் வழங்கினால் உடல்நிலைப் பாதிக்கப்படும். அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைத் துன்புறுத்தியுள்ளனர்” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பிறகு ஜூன் 23- ஆம் தேதி மாலை 03.00 மணிக்கு செந்தில் பாலாஜியை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ரசிகர்களை ஏமாற்றிய ஆதிபுருஷ்….. அதிர்ச்சியில் படக்குழுவினர்!
மேலும், மருத்துவமனையிலேயே அமலாக்கத்துறை விசாரிக்கலாம். மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை வெளியே அழைத்து செல்லக் கூடாது என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.