சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் நவம்பர் 06- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
“ராயகடா பயணிகள் ரயில் சிவப்பு சிக்னலை மீறிச் சென்றதால் விபத்து”- ரயில்வேத் துறை விளக்கம்!
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த ஜூன் 14- ஆம் தேதி அமலாக்கத்துறையினரால், கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல், 8வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் இரண்டு ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் காரணங்களைக் குறிப்பிட்டு, ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு, கடந்த அக்டோபர் 19- ஆம் தேதி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
தமிழகத்திற்கு வினாடிக்கு 2.600 கனஅடி தண்ணீர் திறக்கப் பரிந்துரை!
அந்த மனு இன்று (அக்.30) உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் பீலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தபோது, அப்போது ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் நவம்பர் 06- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.