சுவர் ஏறி சென்று வருமான வரிசோதனை- செந்தில் பாலாஜி
வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை தலைமை செயலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், “வருமான வரிசோதனை என்பது எங்களுக்கு புதிதான ஒன்று அல்ல. எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை. என் வீட்டில் சோதனை நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார். எனது தம்பி, அவரது நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.
எனக்கு வந்த தகவல்கபடி 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. சோதனை நடக்கும் இடங்களில் கட்சியினர் இருக்கக்கூடாது. முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தியுள்ளேன். எனது தம்பி வீட்டில் சுவர் ஏறிச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். சுவரில் ஏறிச் சென்று சோதனை மேற்கொண்ட வீடியோ எனக்கு வந்துள்ளது. அதனை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும்.
எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்பு தர தயார்.சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை சோதனை முழுவதும் நடைபெற்று முடிந்தவுடன் மீண்டும் எனது கருத்துகளை பதிவு செய்கிறேன். 2006க்கு பிறகு என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் யாரும் சொத்துக்கள் வாங்கவில்லை. எனது தம்பி மனைவியின் தயார் அவரது மகளுக்கு கொடுத்த இடத்தில்தால் எனது தம்பி வீடு கட்டுகிறார். அதில் என்ன தவறு ? நேர்மையாக இருக்கிறோம். எந்த சோதனையையும் விசாரணையையும் எதிர்கொள்ள நானும் என்னை சார்ந்தவர்களும் தயார். ” எனக் கூறினார்.