Homeசெய்திகள்தமிழ்நாடுசோதனை என் வீட்டில் இல்லை - செந்தில் பாலாஜி

சோதனை என் வீட்டில் இல்லை – செந்தில் பாலாஜி

-

சோதனை என் வீட்டில் இல்லை – செந்தில் பாலாஜி

எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

senthil balaji

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் கரூர் மாவட்டம், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 07.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னையில் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதரபாத் ஆகிய பகுதிகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை தொடர்கிறது. இதனிடையே கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த சென்ற போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகாரிகளின் வாகனங்களை உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Minister senthil balajis cool reply to press while IT raid in many places

இந்நிலையில் சோதனைக்கு மத்தியில் தலைமைச் செயலகத்தில் தனது அறைக்குச் சென்ற செந்தில் பாலாஜி, துறை ரீதியிலான கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் சோதனை நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் மட்டுமே சோதனை நடக்கிறது” என்றார்.

MUST READ