அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களோடு தொடர்புடைய 25 கோடி ரூபாய் பினாமி சொத்துகளை அடையாளம் கண்டுள்ளதாக மத்திய அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி தொடர்பான மூன்று மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு!
அனுராதா ரமேஷ் என்பவர் தனக்கு சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை அடகு வைத்து ரூபாய் 40 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பின்னர், இந்த நிலம் செந்தில் பாலாஜியின் பினாமிக்கு வெறும் 10.88 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலம் விற்பனை செய்யப்பட்ட அதே நேரத்தில் அனுராதாவின் கடன்கள் அடைக்கப்பட்டது, அவருக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலம் செந்தில் பாலாஜியின் உறவினரான லக்ஷ்மி என்பவரால் வாங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. லக்ஷ்மி தனது பழைய நகைகளை விற்பனை செய்து நிலத்தை வாங்கியது போன்ற வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்”- தமிழக அரசு அறிவிப்பு!
நகை விற்பனை தொடர்பான பரிவர்த்தனை போலியானதாக தெரிவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. குறைந்த விலைக்கு வாங்கிய நிலத்தை லக்ஷ்மி தனது மகள் நிர்மலாவுக்கு தானமாக வழங்கினார். சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை செந்தில் பாலாஜி இவ்வாறு பயன்படுத்திக் கொண்டதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.