Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!

-

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!
File photo

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கொச்சியில் கைது செய்தது அமலாக்கத்துறை.

“மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை”- திருச்சி சிவா பேட்டி!

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை தரப்பில் பலமுறை சம்மன் வழங்கப்பட்டது. நேரில் ஆஜராகாமல் அமலாக்கத்துறைக்கு போக்குக்காட்டி வந்த நிலையில், கரூரில் அவர் கட்டி வரும் புதிய வீட்டை அமலாக்கத்துறை கடந்த வாரம் முடக்கியிருந்தது.

இந்த நிலையில், அசோக்குமாரின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வந்த அமலாக்கத்துறையின் அதிகாரிகள், இன்று (ஆகஸ்ட் 13) மதியம் 02.00 மணியளவில் கேரளா மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் வைத்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.

“1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன?”- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அதைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் அவர், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, அசோக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிடும் பட்சத்தில், அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ