Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை- சிவசங்கர்

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை- சிவசங்கர்

-

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை- சிவசங்கர்

இருசக்கர வாகனத்தை பைக் டாக்சியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்றக்கொள்ளவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “பைக் டாக்ஸி முறையை தமிழ்நாடு அரசு இதுவரை ஏற்கவில்லை. பைக் டாக்ஸியை வாடகைக்கு விடும் வாகனமாக எடுத்துக் கொள்ள முடியாது. இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடுவதற்கு எந்த விதியும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு இதுவரை அனுமதியில்லை. இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை தேவைப்படுகிறது.

அமைச்சர் சிவசங்கர்

ரேபிடோ தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 2,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் பேருந்து சேவை கட்டணம் உயர்ந்துள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய முதலமைச்சர் உத்தரவின் பேரில் கட்டண உயர்வு ஏதும் செய்யப்படவில்லை.” எனக் கூறினார்.

MUST READ