தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான 36 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டி
இது தொடர்பாக, அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கடந்த மே 25- ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லல் குரூப் பவுண்டேஷனில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், 36.30 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை தற்காலிகமாக பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கிக் கணக்கில் இருந்து 35 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்!
அண்மையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், லைகா புரொடக்ஷன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையுடன் தொடர்புடைய கல்லல் குரூப் பவுண்டேஷன் உள்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர். உதயநிதி அறக்கட்டளையின் வழக்கறிஞர் பாபுவிடம் அமலாக்கத்துறை விளக்கங்களைப் பெற்றது. அதன் அடிப்படையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.