சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, நடிகர் மாரிமுத்துவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவராகவே வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் இன்று மாலை 03.30 மணியளவில் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், வருசநாடு அடுத்த பசுமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாரிமுத்துவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும், இயக்குநருமான மாரிமுத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்”- நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.