Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் பிரசாரத்தின் போது கூழ் வாங்கி குடித்த அமைச்சர் உதயநிதி!

தேர்தல் பிரசாரத்தின் போது கூழ் வாங்கி குடித்த அமைச்சர் உதயநிதி!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாலையோரத்தில் கூழ் வாங்கி குடித்தார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோல் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருவண்ணாமலையில் நம்முடைய வெற்றி வேட்பாளர் அருமை சகோதரர் சி.என். அண்ணாதுரைக்கு ஆதரவாக இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர், செங்கத்துக்கு வாக்கு சேகரிக்க சென்று கொண்டிருந்தோம். முறையார் பகுதியை நெருங்கியதும் அங்கே கூழ் வியாபாரம் செய்து கொண்டிருந்த பேயாளம்பட்டு கிராமத்தை சேர்ந்த அக்கா சின்ன பாப்பா அவர்கள், பாசத்தோடு வந்து வாகனத்தை இடைமறித்தாரகள். அன்போடு நலம் விசாரித்த அவர், வெயில் அதிகமாக இருக்கிறது என்று கூறி பருகுவதற்கு கூழை கொடுத்தார். கழக அரசின் சாதனைகளை வாழ்த்தியதோடு, அவருக்கான கோரிக்கையையும் உரிமையோடு முன் வைத்தார். அக்காவின் அன்பில் நெகிழ்ந்தோம். அவருக்கு என் அன்பும், நன்றியும் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ