Homeசெய்திகள்தமிழ்நாடுசுகாதாரத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது - உதயநிதி ஸ்டாலின்!

சுகாதாரத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின்!

-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக அமைச்சர் உதயதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையில் இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மகப்பேறியல் துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. மகப்பேறியல் சார்ந்து ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவ அறைகள் உள்ளிட்ட கட்டுமான வசதிகளை இன்று திறந்து வைத்தோம்.

மகப்பேறு மருத்துவ சேவைகளுக்கான PICME 3.0 மென்பொருள் – அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு கால இறப்புகளை தடுக்க உதவிடும் உபகரணங்கள் – அவசர கால மகப்பேறு & குழந்தைகள் பராமரிப்பு மையத்துக்கு தேவையான கருவிகளின் சேவைகளையும் தொடங்கி வைத்தோம். மகப்பேறியல் துறையில் சிறப்பு பயிற்சி முடித்த செவிலியர்களுக்கு சான்றிதழ்கள் – சேர்க்கை ஆணைகளை வழங்கினோம். சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நம்பர் 1 என இன்று போல் என்றும் வெற்றி நடைபோட்டிட அயராது உழைத்திடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ