மாநில சுயாட்சிக்கு ஊறு விளைவிக்கும் பாசிஸ்டுகளை வீழ்த்த, அண்ணாவின் நினைவு நாளான இன்று உறுதியேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் தலைமகன் – மாநில உரிமைகளின் போர்க்குரல் – தமிழர்களை காக்க கழகமெனும் பேராயுதம் தந்த நம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, கழக பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் சக அமைச்சர்கள் – கழகப் பொருளாளர் – துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் – மாவட்டக்கழக செயலாளர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று பங்கேற்றோம்.
மேலும், வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் நம் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தோம் பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்க – மாநில சுயாட்சிக்கு ஊறு விளைவிக்கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்த, அண்ணாவின் நினைவு நாளான இன்று உறுதியேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.