திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்பு நடைபெற்ற சோதனையின் போது, சீல் வைக்கப்பட்ட அறை தற்போது திறக்கப்பட்டு, அதில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானத்தில் பக்தர்கள் நெய் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி!
இதில், சில கோப்புகள் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மூன்று காடுகளில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு பேர் காவல்துறையினரின் பாதுகாப்புடன், சோதனையிலும், ஆவணங்கள் ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம், குன்னத்தூர் கிராமத்தில் தர்மகர்த்தாவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான அமைச்சரின் உறவினர் ராஜப்பிரகாஷ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு தனது உறவினருக்கு குன்னத்தூர் பகுதியில் 35 ஏக்கரில் நிலம் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, ராஜபிரகாஷின் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் என அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த நவம்பர் 03- ஆம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, ஐந்து நாட்களுக்கு நீடித்தது.
அமலாக்கத்துறை சோதனையில் 11.60 கிலோ தங்கம் பறிமுதல்!
அதன் அடிப்படையில், தற்போது, திருவண்ணாமலை, செங்கல்பட்டு பகுதிகளில் வருமான வரித்துறையினர் முகாமிட்டு, சோதனை நடத்தி வருகின்றனர்.