Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

-

 

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
Photo: ANI

தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (நவ.03) காலை 06.00 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

357 ரன்களைக் குவித்தது இந்திய அணி!

அதன்படி, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும், திருவண்ணாமலையில் உள்ள வீடு, அலுவலகம், உறவினர்களின் வீடுகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்த புகாரிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியில் சோதனை நடக்கிறது. அதேபோல், பொதுப்பணித்துறை, ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!

கடந்த 2021- ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் பரப்புரையின் போதும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. தி.மு.க.வில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனைத் தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

MUST READ