Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் மாயமான சிறுமி செய்த பகீர் வேலைகள்! அதிரவைக்கும் பின்னணி

கோவையில் மாயமான சிறுமி செய்த பகீர் வேலைகள்! அதிரவைக்கும் பின்னணி

-

- Advertisement -

கோவையில் மாயமான சிறுமி செய்த பகீர் வேலைகள்! அதிரவைக்கும் பின்னணி

கோவையில் மாயமான 12 வயது சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சிறுமி

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானார். இதையடுத்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, 6 தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சிறுமி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமியை தனிப்படை போலீசார் கோவை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கோவை: மாயமான 12 வயது சிறுமி; தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்! | special  teams formed to trace missing school girl in Coimbatore - Vikatan

முன்னதாக சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், அதிகமாக செல்போன் பார்ப்பதாக கூறி சிறுமியில் தாய் திட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சிறுமி வீட்டில் இருந்த 500 ரூபாய்யை எடுக்கொண்டு, கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்றதாகவும், அங்கிருந்து பழனிக்கு சென்று முருகன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து கேரளா மாநிலம் கோழிஞ்சாபாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார். அங்கு அதிகளவு மழை பெய்ததால் அச்சமடைந்து மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார்.

பேருந்து நிலையத்தில் இருந்த பயணியிடம் செல்போனை வாங்கி தனது தாயிற்கு அழைத்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, பின்னர் சிறுமியை தனிப்படை செய்த போலீசார் மீட்டதாக தெரிவித்துள்ளார்.

MUST READ